[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்

அம்மா பேரவை செயலாளர்கள் பயிற்சி முகாம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுரை

admk-meet-in-chennai

அதிமுகவில் அம்மா பேரவைச் செயலாளர்களுக்கான இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் சென்னையில் இன்று தொடங்கியது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமின் தொடக்கத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அம்மா பேரவை செயலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் பங்கேற்று அறிவுரை வழங்கினர்.

அதிமுக அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறுவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆயத்தமாவது உள்ளிட்டவைகள் குறித்து பயிற்சி முகாமில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. அம்மா பேரவை செயலாளர்களாக உள்ள அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரும் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close