[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

வேட்புமனு தாக்கலுக்கு முன்பு எம்.ஜி.ஆர், ஜெ.வுக்கு மரியாதை செலுத்துகிறார் விஷால்

vishal-will-file-his-nomination-tom

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு முன்பு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு மரியாதை செலுத்தவுள்ளார்.

திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் மற்றும் டிடிவி தினகரன் இடையேதான் போட்டி நிலவும் என்று கூறப்பட்டாலும் பாஜக, நாம் தமிழர் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து, விஷால் போட்டியிடுவதாக அறிவித்த பிறகு ஆர்.கே.நகர் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை மதியம் 12.30 மணியளவில் விஷால் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விஷால் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பாக நாளை காலை 9 மணியளவில் சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திலும், 10 மணியளவில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                                

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close