[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்

டிச.3 சூரத் பேரணி: பாஜகவின் கோட்டையை தகர்ப்பாரா ஹர்திக் படேல்

hardik-patel-s-rally-in-surat-on-december-3

படேல் சமூக மக்கள் அதிகமாக வாழும் சூரத் நகரின் அத்தனை தொகுதிகளையும் கடந்த தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்த சூழலில், படேல் சமூக தலைவர் ஹர்திக் படேல் டிசம்பர் 3 ஆம் தேதி பாஜகவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி இயக்கத்தின் தலைவர் ஹர்திக் படேல். படேல் சமூக மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி இவர் நடத்திய போராட்டங்கள் குஜராத் மாநில அரசையே ஆட்டம் காண வைத்தது. டிச.9 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் ஹர்திக் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் வரும் டிச.3 ஆம் தேதி ஹர்திக் படேல், பாஜகவுக்கு சிந்தாமல் சிதறாமல் வாக்கு விழும் சூரத் நகரில் வாக்கு சேகரிக்கவுள்ளார். சூரத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் படேல் சமூகத்தினரே அதிகம். வியாபார சமூகமான இவர்கள் ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்கத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிகிறது. மேலும், பெரும்பான்மை சமூகமான படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீட்டு உரிமைகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதோடு, படேல் சமூகத்தை சேர்ந்த இளம் தலைவரான ஹர்திக் படேலுக்கு பெரும் செல்வாக்கும் உள்ளது. இந்நிலையில் ஹர்திக் படேலின் பேரணி, பாஜகவின் கோட்டையை தகர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சூரத் நகரத்தில் உள்ள எந்த தொகுதியிலும் பாஜக, பழைய வேட்பாளர்களை நிறுத்தவில்லை. அமைச்சர்களுக்கு கூட அங்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. கிஷோர் கனானி எம்.எல்.ஏ. ஒருவர் மட்டுமே பழைய வேட்பாளர். ஹர்திக் படேலின் வியூகங்களை முறியடிக்கவே இந்த வேட்பாளர் மாற்றம் என்று பேசப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close