[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

அதிக விலைக்கு மின்சார மீட்டர்கள் கொள்முதல் செய்தது ஏன்?: ஸ்டாலின் கேள்வி

mk-stalin-questions-to-tn-govt

விதிகளை மீறி அதிக விலைக்கு எலக்ட்ரானிக் மின் மீட்டர்களை கொள்முதல் செய்ய யார் காரணம் என தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருமுனை மின்சாரப் பயன்பாட்டினை அளவீடு செய்வதற்கான மின் மீட்டர் கொள்முதல் டெண்டரில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த கேபிட்டல் பவர் சிஸ்டம்ஸ் நிறுவனம், ஒரு மீட்டரை 453 ரூபாய்க்கு வழங்க தயார் என்று கூறிய நிலையில், 495 ரூபாய்க்கு மீட்டரை வழங்க வந்த ஹெச்.பி.எல். நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

29 லட்சத்து 88,000 மின்சார மீட்டர்களை அதிக விலை கொடுத்து வாங்க தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் டெண்டர் விட்டிருப்பது வியப்பளிப்பதாகவும், டெண்டர் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தை மீறும் அளவிற்கு இந்த டெண்டர் விஷயத்தில் அழுத்தம் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மின்வாரியத்தின் நலனையோ, நுகர்வோருக்கு ஏற்படும் நஷ்டத்தையோ கண்டு கொள்ளாமல் அதிக விலை கொடுத்து மின்சார மீட்டர்களை வாங்குவதால் யாருக்கு ஆதாயம் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், மின்துறை அமைச்சர் மக்களின் நலனுக்காக செயல்படுகிறாரா அல்லது சொந்த நலனுக்காக பாடுபடுகிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சார மீட்டர் கொள்முதலில் நடந்த குளறுபடிகள் போன்றவற்றில் மின்வாரியத்தை கட்டாயப்படுத்தியது யார்? குறைந்த விலைக்கு மின்சார மீட்டர்களை கொடுக்க வந்த கம்பெனியை நிராகரிக்க அழுத்தம் கொடுத்தது யார் என்ற விவரங்களை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் உடனடியாக வெளியிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close