[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

நமது கலாச்சார விஷயத்தில் கமல் வீக்: ஹெச்.ராஜா கிண்டல்

h-raja-attack-to-kamal-haasan

நமது கலாச்சார விஷயத்தில் கமல் வீக் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். 

இந்து தீவிரவாதம் இல்லை என்று கூற முடியாது என கமல்ஹாசன் எழுதியதில் இருந்தே பாஜக V/S கமல் சர்ச்சை தமிழகத்தில் தொடங்கிவிட்டது. அவருக்கு எதிராக வழக்கு போடப்பட்டுள்ளது. அவரை சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பகீரங்க மிரட்டல் கூட கேட்க தொடங்கி இருக்கிறது. 
இந்த நிலையில் “நீர்நிலைகளை தெய்வங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும்” என விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற கமல் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “கங்கைக்கு ஆரத்தி எடுத்து கும்பிட்டு தான் மோடி ஜி பதவியேற்றார். நதிகளை தெய்வமாக கும்பிடுவது நம் கலாச்சாரம்.கலாச்சார விஷயத்தில் கமல் வீக் தான்.” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல உதயநிதி ஸ்டாலின் “மெர்சல் படத்திற்கு முழு புரமோஷன் கொடுத்தது பாஜகதான். அதைபோல என்னுடைய ‘இப்படை வெல்லும்’ படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம் என்று நினைக்கிறேன்.”என பேசியிருந்தார். அதற்கு “ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்.” என ராஜா கிண்டல் செய்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close