[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

சிவாஜியே தோற்றுவிட்டார்... கமல் ஜெயிப்பாரா?: அமைச்சர் ஜெயக்குமார்

minister-jayakumar-about-dengue-and-kamal

தமிழக அரசியல் களத்தில் நடிகர் திலகம் சிவாஜியே தோற்றுவிட்டார், கமல்ஹாசன் ஜெயிப்பாரா? என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், டெங்கு டெங்குவை ஒழிக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். டெங்குவை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற நடிகர் கமல்ஹாசனின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த அவர், கமல்ஹாசன் களத்திற்கு வராமல் ட்விட்டரில் மட்டுமே கருத்துக் கூறுவதாக குறிப்பிட்டார்.

மக்களோடு மக்களாக இருப்பவர்கள் மட்டுமே மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற முடியும் என்றும், ட்விட்டரில் மட்டும் கருத்து தெரிவிப்பவர்களால் அது முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அரசியல் களத்தில் நடிகர் சிவாஜியே ஜெயிக்க முடிவில்லை என்றும், கமல்ஹாசான் ஜெயிப்பாரா? என்றும் அவர் விமர்சித்தார். கமல் முதலில் எம்.எல்.ஏ ஆகட்டும் என்றும், பின்னர் முதலமைச்சர் ஆகலாம் என்றும் ஜெயக்குமார் நகையாடினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close