[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

the-high-court-refuses-to-ban-mla-s-eligibility-order

தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் செப்டம்பர் 18-ம் தேதி தகுதி நீக்கம் செய்தார். இதனையடுத்து தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கின் மீதும் இன்று விசாரணை நடைபெற்றது.

தினகரன் தரப்பில் வழக்கறிஞர் தஷ்யந்த் தவே, சபாநாயகர் தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். 

மேலும், எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு முடியும் வரை 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த அறிக்கை வெளியிடக் கூடாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்ற உத்தரவு, மறுஉத்தரவு வரும் வரை நீட்டிக்கப்படுகிறது” என்று நீதிபதி தெரிவித்தார்.

அக்டோபர் 4-ம் தேதிக்குள் சட்டசபை செயலாளர், கொறடா, முதலமைச்சர் ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். அக்டோபர் 4-ம் தேதிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close