[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் பங்கேற்கிறேன்: வைகோ
 • BREAKING-NEWS சென்னையில் செப்.5 இல் நடைபெறும் முரசொலி பவள விழாவில் வைகோ பங்கேற்க உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கச் சென்றார் வைகோ
 • BREAKING-NEWS திருவள்ளூர்: எண்ணூர், சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்படுகிறது
 • BREAKING-NEWS நீட் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்டாலின்
 • BREAKING-NEWS அனுமதியின்றி பள்ளிகள் நடத்துபவர்களை ஏன் கைது செய்யக்கூடாது - உயர்நீதிமன்றம்
 • BREAKING-NEWS புதுச்சேரி: வீராம்பட்டினத்தில் உள்ள ரிசார்ட்டில் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்படுகின்றனர்
 • BREAKING-NEWS ஊழல் இல்லாத புதிய அமைச்சரவை அமைத்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்: திவாகரன்
 • BREAKING-NEWS முத்தலாக் செல்லாது என அறிவித்தது வரவேற்புக்குரியது: ப.சிதம்பரம்
 • BREAKING-NEWS நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு ஏமாற்றவில்லை: தம்பிதுரை
 • BREAKING-NEWS ப்ளூவேல் கேம் வழக்கில் இணையதள நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
 • BREAKING-NEWS மருத்துவ மாணவர் சேர்க்கை நாளை மறுநாள் தொடங்கும் - தமிழக அரசு
 • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அரசு
 • BREAKING-NEWS திமுகவுக்கு ஆதரவாக நாங்கள் கிடையாது: நாஞ்சில் சம்பத்
அரசியல் 10 Aug, 2017 06:45 PM

ஃபோர் ட்வென்ட்டிகளுக்கு பதில் சொல்ல முடியாது: டிடிவி தினகரன் தாக்கு

420-can-not-be-answered-ttv-dinakaran

கட்சியின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு இருக்கும்போது பெயரைப் பயன்படுத்துகிறார்கள். பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர் நியமித்த பொறுப்பாளர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி செய்வதுதான் ஏமாற்று வேலை. இதுபோன்று ஏமாற்று வேலை செய்யும் ஃபோர் ட்வென்ட்டிகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளாரக ஏற்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “என்னை நீக்குகின்ற அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டும்தான் இருக்கிறது. நேற்று முளைத்த காளான்கள் போல பேசுகிறவர்கள், சுயநலத்துக்காக பேசுகிறவர்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற பயத்தில் பேசுகின்றவர்களுகெல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எம்.ஜி.ஆர். கண்ட இந்த இயக்கத்தை ஜெயலலிதா சொன்னதைப் போல 100 ஆண்டுகளுக்கு கட்டிக் காப்பாற்றுகின்ற பணியை செய்யத் தொடங்கிவிட்டேன். யாரோ சில பேர் சொல்வதால் எங்களுடைய பயணம் நிற்காது” என்று அவர் கூறினார்.

இதில் பாஜகவின் அழுத்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “இதில் யாருடைய அழுத்தமும் இல்லை. பதவியில் இருக்கும் சிலருக்கு மடியில் கணம் இருப்பதால், எங்களிடமிருந்து விலகி சுதந்திரமாக செயல்பட விரும்புகிறார்கள். சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தவர்களே அவருடைய நியமனம் செல்லாது என்கிறார்கள். இதுபோன்று ஏமாற்று வேலை செய்யும் 420களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கட்சியின் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்ற உத்தரவு இருக்கும்போது பெயரைப் பயன்படுத்துகிறார்கள். பொதுச்செயலாளர் நியமனத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர் நியமித்த பொறுப்பாளர்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். இப்படி செய்வதுதான் ஏமாற்று வேலை. அவர்கள் இன்று வெளியிட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் கொடுத்தால் அதில் கையொப்பமிட்டவர்களின் அமைச்சர் பதவி போகும், எம்.எல்.ஏ, எம்.பி. பதவி போகும். இதையெல்லாம் பார்த்து கட்சித் தொண்டர்கள் ஏமாறமாட்டார்கள்” என்று டிடிவி தினகரன் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : TTVDhinakaranSasikalaOpsEPSADMKAIADMK
Advertisement:
Advertisement:
[X] Close