[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

நாகபாம்புடன் எடுத்த செல்ஃபியால் ரூ.25 ஆயிரத்தை இழந்த இளைஞர்

selfie-with-cobra-costs-man-rs-25-000

நாகபாம்புடன் செல்ஃபி எடுத்ததால் குஜராத் மாநில இளைஞர் ஒருவருக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் யாகேஷ் பரோட். இவர், தனது முகநூல் பக்கத்தில் பாட்டிலில் அடைக்கபப்ட்ட நாகபாம்பு ஒன்றுடன் எடுக்கப்பட்ட செல்ஃபியை ‘ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்’ என்ற தலைப்புடன் பதிவிட்டார்.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய இந்த செல்ஃபி, விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் வனத்துறை அலுவலர்களுக்கு புகாராக சென்றது. இதையடுத்து யாகேஷிடம் விசாரணை நடத்திய வதோதரா பகுதி வனத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து நாகபாம்பினை மீட்டதுடன், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ள பாம்பினை விற்க முயன்ற குற்றத்துக்காக ரூ.25,000 அபராதமும் விதித்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close