[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS அடுத்த 2 நாட்களுக்கு திருவள்ளூர், வேலூர், தி.மலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

மரித்துப்போன மனிதம்: விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரிடம் கொள்ளை

everyone-ignored-dying-man-on-delhi-road-one-stole-his-mobile-phone

டெல்லியில் சரக்கு வாகனம் ஒன்று மோதியதில் படுகாயமடைந்து ரத்தம் சொட்டசொட்ட உயிருக்குப் போராடிய நபரிடமிருந்து கொள்ளையடித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர் சாலையில் நடந்து செல்லும் போது சரக்கு வாகனம் ஒன்று மோதி சாலையின் ஓரத்தில் தூக்கி எறியப்படுகிறார். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கழித்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்கின்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்த போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு அதில், அந்த நபரை இடித்துத் தள்ளிய சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் படுகாயமடைந்தவர் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமலும், கண்டும்காணாமல் செல்வதும் தெரியவந்துள்ளது. மேலும், ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை அந்த வழியாகச் சென்றவர்கள் கவனிக்காதது போல செல்வதும், அதிலும் ஒருவர் காயமடைந்தவரிடம் இருந்து செல்போனைத் திருடிச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் போலீசார், தப்பியோடிய சரக்கு வாகன ஓட்டுனரைத் தேடிவருகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close