பீகார் மாநிலத்தில் வெங்காயம் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால், பாதுகாப்பிற்காக வெங்காயம் விற்பவர்கள் ஹெல்மேட் அணிந்து விற்று வருகின்றனர்.
பாட்னாவில் பீகார் மாநில கூட்டுறவு சந்தைப்படுத்தல் சங்கத்தின் சார்பில் மானிய விலையில் வெங்காயம் விற்கப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள பீகார் பெண்கள், கூட்டுறவு சந்தைக்கு படையெடுத்துள்ளனர். மலிவு விலையில் விற்கப்படும் வெங்காயத்தை வாங்குவதற்காக அதிகாலை முதலே குறைந்தது 400க்கும் மேற்பட்ட பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
கட்டுக்குள் வருமா வெங்காயம் விலை ?
இங்கு மக்களின் கூட்டம் அலைமோதுவதால் வெங்காயம் விற்பவர்கள் தங்களின் தலையில் ஹெல்மெட் அணிந்து விற்று வருகின்றனர். அத்துடன் மக்களுக்கு டோக்கன் முறையில் வரிசைப்படுத்தி, கூட்டுறவு சந்தை ஊழியர்கள் வெங்காயத்தை விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரி ரோகித் குமார், “பீகார் நகரில் சில பகுதிகளில் வெங்காயத்திற்காக கல் ஏரியும் சம்பவங்கள் நடந்துள்ளன. அத்துடன் கூட்ட நெரிசல்களும் நடைபெற்றுள்ளன. எங்களுக்கு எந்தவித பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. ஆகவே நாங்கள் வேறு வழியின்றி ஹெல்மெட் அணிந்து வெங்காயத்தை விற்று வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உச்சத்தில் விலை ! அப்படி என்ன "வெங்காயம்" ? அதன் வரலாறு என்ன ?
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் பீகாரில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுவது அம்மாநிலப் பெண்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதனால் அங்கு பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர்.
அசாம் மக்கள் ஏன் இப்படி கொந்தளிக்கிறார்கள்? - வரலாற்று காரணம் இதுதான்..!
‘சென்னை ஹோட்டல் ஊழியரை கண்டுபிடிக்க உதவுங்கள்’- தமிழில் வேண்டுகோள் விடுத்த சச்சின்
பாலியல் குற்றங்களுக்கு சினிமாவில் பெண்களை சித்தரிக்கும் விதமும் காரணமே - கனிமொழி
டி20 உலகக் கோப்பையில் தோனி களமிறங்குவார் - பிராவோ நம்பிக்கை
“கலப்பட டீ தூள், காலாவதியான குளிர்பானங்கள்” - திடீர் சோதனையில் சிக்கிய உணவுப் பொருட்கள்