மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் கடந்த 12-ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு ஆட்சியமைக்க சிவசேனா தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்தச் சூழல் இன்று சிவசேனா கட்சியுடன் ஆட்சியமைக்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இன்று இரவு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சூலேவின் இல்லத்தில் இறுதி கட்ட கூட்டணி விஷயங்கள் மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை