[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இன்றைய முக்கியச் செய்திகள்..!

headlines-of-the-day

சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி. மீட்கப்பட்ட 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம். ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீலை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் தேதி டிசம்பர் 13-க்குள் அறிவிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி. தொகுதி மறுவரையறை முழுமை பெறவில்லை என திமுக தரப்பில் வாதம்

10 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். வீட்டு வசதி திட்டத்திற்கு 5000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக பேட்டி

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபடாமலேயே மக்கள் மனதை கவர முடியும் என பிரதமர் மோடி பேச்சு. நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களவையின் பங்கை குறைத்து மதிப்பிடக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதில்

மேலவளவில் 7 பேர் கொலையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் 13 பேர் விடுவிக்கப்பட்டதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம். சமூகத்தில் பயம் குறைந்து குற்றங்கள் அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் கருத்து

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம். கோயிலுக்கு வந்த 50 வயதுக்குட்பட்ட 2 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

தமிழக அரசியலில் நாளை அதிசயம் நடக்கும் என்ற ரஜினிகாந்த்தின் பேச்சால் சலசலப்பு. ரஜினியும், கமலும் இணைந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

கீழடியில் அகழாய்வு நடக்கும் இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் திட்டம் இல்லை. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு தகவல்

செல்போன் சேவை கட்டணங்களை உயர்த்த வோடாஃபோன், ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு. இழப்புகளை சரிகட்ட டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : IndiaHeadlinesModiஇந்தியாமோடி
Advertisement:
Advertisement:
[X] Close