[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

“நிதி நிறுவனங்கள் தாமாக கடன் கொடுக்க முன்வந்தால் ஜாக்கிரதை” - பினராயி விஜயன் எச்சரிக்கை

pinarayi-vijayan-speech-about-loan

தாமாக கடன் கொடுக்க முன்வரும் நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை மக்கள் ஆராய வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனையில் அகில இந்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் பணியாளர் கூட்டமைப்பின் சார்பில் 66வது ஆண்டு விழா நடைபெற்றது. கேரள கூட்டுறவு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை கேரள முதல்வர் பினராயி விஜயன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். 

அப்போது அவர் பேசுகையில், “கூட்டுறவு வங்கிகள் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் கொடுத்து உதவி வருகின்றன. அதேநேரம் தாமாக முன் வந்து கடன் கொடுக்கும் இதர நிதி நிறுவனங்கள் அங்கீகாரம் உள்ளதுதானா? அவற்றின் கடந்தகால செயல்பாடுகள் என்ன? என்பது குறித்து ஆராய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

கூட்டத்தில் கேரள மின் வாரிய அமைச்சர் எம்.எம்.மணி மற்றும் இடுக்கி மக்களவை உறுப்பினர் டீன் குரியாக்கோஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close