கர்நாடக மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இன்று இணைந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில், இந்த 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல இவர்கள் அனைவரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 பேரும் பாஜகவில் இணைய உள்ளதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா நேற்றுத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இரண்டு பேர் இன்னும் இணையவில்லை. பாஜகவில் இணைந்துள்ள அனைவரும் இடைத்தேர்தலில் போட்டியிட அக்கட்சி சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
உள்ளாட்சி தேர்தல் : நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்
“நான் வெஜிடேரியன், வெங்காயத்தை சாப்பிட்டதேயில்லை” - மத்தியமைச்சர் அஷ்வினி சௌபே
நாடாளுமன்ற கேண்டீனில் எம்பிக்களுக்கு மலிவு விலையில் உணவு கிடையாது
9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் : உச்சநீதிமன்றம் கருத்து
பின்னால் உணவுப்பை; முன்னால் செல்லப்பிராணி : சென்னையை வலம் வரும் பிரேம் - பைரு!
மரத்தை வெட்ட எதிர்த்ததால் ஆசிரியர் மீது பாலியல் புகார்? - போலீசார் விசாரணை
மின் கம்பம் ஏறும் பணி... உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பெண் அசத்தல்..!
கைலாசம் தீவுக்கு செல்ல விசா எடுக்கும் வழிமுறைகள் என்ன? - அஸ்வின் கிண்டல்