[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் வேட்பு மனுத் தாக்கல். நாளையுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைகிறது

‘மகாராஷ்டிராவின் சேவகன்’ - ட்விட்டர் சுயவிவரத்தை மாற்றிய ஃபட்னாவிஸ் 

devendra-fadnavis-update-twitter-bio-refers-to-self-as-maharashta-s-sevak

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் கணக்கில் உள்ள சுயவிவரத்தை மாற்றி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வந்தது முதல், ஆட்சி அமைப்பத்தில் குழப்பமான சூழலே நிலவி வந்தது. அங்கு அதிக இடங்களை வென்ற பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் அதனை பாஜக நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதற்காக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அதுவும் நடக்காத சூழலில் எல்லா முயற்சிகளும் இழுபறியில் பாதியிலேயே நின்றன.

போதிய அவகாசம் நிறைவடைந்ததால் மகாராஷ்டிராவில் குடியரசு ஆட்சி அமைய பரிந்துரை செய்ததாக ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. உடனே மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதலை, மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. குடியரசுத் தலைவர் நேற்று ஒப்புதல் அளித்தார். அதனையொட்டி உடனடியாகவே மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.

இந்த இழுபறிகளுக்கு இடையே, முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதலில் அவரது ட்விட்டர் கணக்கில் இருந்த ‘முதல்வர்’ என்ற சுயவிவரத்தை பிறகு ‘காபந்து முதல்வர்’ என மாற்றினார். அது சில தினங்கள் வரை நீடித்தது. அதன் பிறகு நடந்த அரசியல் ஆட்டத்தில் இறுதியாக அவர் கடந்த 8 ஆம் தேதி தனது முதல்வர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் தனது சுயவிவர பக்கத்தில் என்ன வைப்பார் என எதிர்பார்ப்பு நிலவியது. 

இந்நிலையில் ‘காபந்து முதல்வர்’ என்ற பொறுப்பை நீக்கிவிட்டு இப்போது  “மகாராஷ்டிரா’ஸ் சேவாக்” என மாற்றியுள்ளார். ஏறக்குறைய ‘மகாராஷ்டிர மாநிலத்தின் சேவகன்’ என அர்த்தம் தரும் சொல்லை அவர் தன் சுயவிவரமாக வைத்து கொண்டுள்ளார். கடந்த மக்களவை தேர்தலின் போது பிரதமராக இருந்த நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த ‘பிரதமர்’ என்ற சுயவிவர அடையாளத்தை அகற்றிவிட்டு ‘செளக்கிதார்’ என முன்பு மாற்றியது குறிப்பிடத்தக்கது.
  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close