காங்கிரஸ் மகாராஷ்டிராவின் எதிரி அல்ல என சிவசேனாவின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் சஞ்சய் ராவத், காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் எதிரி அல்ல என்றும், இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் வேறுபாடுகள் மட்டுமே உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மறைந்த முதலமைச்சர் யஷ்வந்த்ராவ் சவான் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் நல்ல தலைவர்கள் என்றும் அவர்கள் மகாராஷ்டிராவின் முன்னேற்றத்திற்காக பணியாற்றியுள்ளதாகவும் அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.
மகாராஷ்டிராவில் வலுவான அரசு கொண்டுவருவதற்கான முடிவை காங்கிரஸ் எடுத்திருந்தால் அது மாநிலத்திற்கு நல்லது என்றும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைத்தும் அவர்கள் ஏன் காத்திருக்கிறார்கள் என்று தங்களுக்குத் தெரியவில்லை என கருத்து தெரிவித்துள்ளார். நாளை இரவு எட்டு மணிக்கு பாஜகவினர் ஆளுநரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக சஞ்சய் ராவத் கூறியிருக்கிறார்.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை