[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேயர் பதவிக்கு மறைமுகமாக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது - கே.எஸ்.அழகிரி
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் என்பது சட்டத்திற்கு உட்பட்டதே; மறைமுகத் தேர்தலுக்கு அவசரச் சட்டம் பிறப்பித்தது வியூகம் என்பது அல்ல - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS எங்களுடைய செயல்பாட்டை ஏற்றுக்கொண்டு பாஜக கூட்டணிக்கு ரஜினியும், கமலும் வரலாம் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்தது தமிழக அரசு
  • BREAKING-NEWS இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யபப்டுவதும் இந்தாண்டு அதிகரித்துள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு சோனியா காந்தி ஒப்புதல் எனத் தகவல்
  • BREAKING-NEWS என்னை வாழவைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி; ‘ICON OF GOLDEN JUBILEE' விருது பெற்றதில் மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

கனமழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 1.5 லட்சம் பேர் பாதிப்பு

rain-flood-in-prama-putra-river

அசாம் மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையால் ‌பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன. சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மீட்புப் படையின் 6 பிரிவுகள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜோர்ஹட் அருகே ஒரு கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய 80 பேரை ராணுவத்தினர் படகு கொண்டு மீட்டனர். வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்த கால்நடைகளையும் அவர்கள் பத்திரமாக மீட்டு வந்தனர்.

மேலும், 2 மாவட்டங்களில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பொக்தோய் ஆறு ஆபாய அளவை தாண்டி ஓடுவதால் மக்கள் அப்பகுதிக்கு செல்லக் கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close