[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

உடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம் 

jammu-and-kashmir-reopens-to-tourists-after-2-months-all-help-assured

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தும் விளக்கப்பட்டது. இதன் காரணமாக ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்டு வந்த கட்டுபாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வந்தன. அந்த வகையில் தற்போது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா செல்ல அனுமதி மாநில அரசு நிவாகம் அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்தியபால் மாலிக் கடந்த திங்கட்கிழமை தெரிவித்திருந்தார். அதன்படி தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதில்  “ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இனி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர ஜம்மு-காஷ்மீர் தயாராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close