[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற பரிந்துரை செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து

ஒரே ட்வீட் தான்; மகனிடம் தாயை பேச வைத்த ரயில்வே துறை

twitter-user-sashwat-took-to-twitter-when-he-couldn-t-get-in-touch-with-his-mother

ரயிலில் பயணம் செய்த தன் தாயை தொடர்புகொள்ள முடியவில்லை என ட்வீட் செய்த மகனுக்கு ரயில்வே உடனடியாக உதவி செய்துள்ளது

சாஷ்வாத் என்பவர் ரயில்வே துறையின் ட்விட்டர் கணக்கையும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்து ஒரு உதவியை கோரினார். அதில், அஜ்மிர் - ஷெல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னுடைய அம்மா பயணம் செய்கிறார். என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏதேனும் உதவி செய்ய முடியுமா என கோரியுள்ளார். உடனடியாக ட்விட்டரின் பதில் அளித்த ரயில்வே, சாஷ்வாத்தின் தாய் பயணம் குறித்த தகவல்களைக் கேட்டது. பின்னர் உங்கள் கோரிக்கை தகுந்த அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. சிறிது நேரம் கழித்து மற்றொரு ட்வீட் செய்த சாஷ்வாத், உங்களது உடனடி நடவடிக்கைக்கு நன்றி. உங்கள் உதவிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்

இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள ரயில்வே துறை, ''இந்திய ரயில்வே துறை பயணிகளை பாதுகாப்பாக உணர வைக்கிறது. தன் தாயை  தொடர்புகொள்ள முடியவில்லை மகன் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ரயில்வே உடனடியாக நடவடிக்கை எடுத்து மகனிடம் தாயை தொடர்புகொள்ள உதவி செய்தது’’ என குறிப்பிட்டுள்ளது

சமூக வலைதளங்களில் கோரப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் ரயில்வே துறைக்கு இணையவாசிகள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close