[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

படிப்பதற்கு வயது ஏது?: 83 வயதில் முதுகலை பட்டம் !

it-s-never-too-late-for-learning-this-punjab-man-gets-masters-degree-at-83

83 வயதில் முதியவர் ஒருவர் முதுகலை பட்டம் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

படிப்பதற்கு வயது தடையில்லை என்பதை மீண்டும் ஒருவர் நிரூபித்துள்ளார். பாஞ்சாப் மாநிலம் ஹோசியர்பூர் பகுதியை சேர்ந்தவர் சோஹன் சிங் கில்(83). இவர் 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிறந்தார். இவர் தனது பள்ளிப்படிப்பை கால்சா உயர்நிலை பள்ளியில் முடித்துள்ளார். அதன்ப்பினர் 1957ஆம் ஆண்டு கால்சா கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். இதனைத் தொடர்ந்து அமிர்தசர்ஸ் பகுதியிலுள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியர் படிப்பிற்கு சேர்ந்துள்ளார். எனினும் இவருக்கு முதுகலை பட்டம் படிக்க வேண்டும் என்ற ஆசை பல நாட்கள் இருந்துள்ளது. எனினும் படிக்க முடியாமல் போனது. 

இதனைத் தொடர்ந்து அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஏ ஆங்கிலம் சேர்ந்துள்ளார். தற்போது இந்தப் பட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இதுகுறித்து சோஹன் சிங் கில், “நான் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருக்கும் போது கல்லூரி துணை முதல்வர் என்னை முதுகலை பட்டம் படிக்கும்படி அறிவுறுத்தினார். ஆனால் துரதர்ஷ்டவசமாக எனக்கு கென்யாவில் வேலை கிடைத்துவிடவே நான் அதனை படிக்க முடியாமல் போனது. இதன்பின்னர் நான் கென்யாவிற்கு குடிபெயர்ந்தேன். அங்கு எனக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. இதனால் அங்கு தங்கி பணியாற்றினேன்.

இதனைத் தொடர்ந்து கென்யாவிலிருந்து மீண்டும் 1991ஆம் ஆண்டு இந்தியா திரும்பினேன். இங்கும் நான் 2017ஆம் ஆண்டு வரை சில பள்ளிகளில் ஆசிரியர் பணியை தொடர்ந்தேன். அப்போது மீண்டும் எனக்கு முதுகலை பட்டம் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அதிலும் குறிப்பாக எனக்கு ஆங்கில மொழி மீது அதிக ஆர்வம் இருந்தது. ஆகவே நான் எம்.ஏ ஆங்கிலம் பட்டப்படிப்பை படிக்க தீர்மானித்தேன். இதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு விண்ணப்பித்தேன். 

கடவுளின் ஆசியாலும் என்னுடைய தீவிர முயற்சியாலும் தற்போது இந்தப் பட்டப்படிப்பை படித்து முடித்துள்ளேன். நான் கென்யாவில் பணியாற்றிய போது ஆங்கிலம் மீது எனக்கு ஏற்பட்ட நாட்டம் இந்தப் படிப்பை முடிக்க உதவியாக இருந்தது. அது என்னால் ஆங்கிலத்தை படித்து முடிக்க முடியும் என்ற மன உறுதியையும் அளித்தது. தற்போது இந்தப்  பட்டப்படிப்பை  வெற்றிகரமாக முடித்துள்ளேன். இதன்பிறகு நான் குழந்தைகளுக்கான புத்தகங்களை எழுதவுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close