[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அமெரிக்காவின் வால்மார்ட் உள்பட இருவேறு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 7 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜு
  • BREAKING-NEWS ரஜினியின் அரசியல் பிரவேசம் காலம் கடந்தது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

திகார் சிறையில் புதிய அழகு நிலையம்: வரிசையில் நிற்கும் கைதிகள்

ahead-of-saturday-mulaqaat-inmates-throng-tihar-beauty-parlour

டெல்லி திகார் மகளிர் சிறையில் அழகு நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

டெல்லி திகாரின் 6ஆம் நம்பர் சிறைச்சாலையில் பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஒரு அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அழகு நிலையத்தை மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த பெண் கைதி ஒருவர் நடத்தி வருகிறார். திகார் சிறையிலுள்ள பெண் கைதிகள் அதிகளவில் இந்த அழகு நிலையத்திற்கு வருகின்றனர். அதிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அழகு நிலையத்தில் கூட்டம் அதிகமாக வருகிறது என்று தெரியவந்துள்ளது. 

இதுதொடர்பாக திகார் பெண்கள் சிறைச்சாலையின் கண்கானிப்பாளர் சரிதா, இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “இந்த அழகு நிலையம் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை தோறும் சிறை கைதிகளை அவர்களின் குடும்பத்தினர் வந்து பார்க்க அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். எனவே தங்களின் குடும்பத்தினர் வருவதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமையில் இந்த அழகு நிலையத்தில் அதிகக் கூட்டம் இருக்கும். பலர் வரிசையில் நின்று அழகுபடுத்திச் செல்கின்றனர். இந்தச் சிறைச்சாலை பெண் கைதிகளிடம்  அழகு நிலையம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

இந்த அழகு நிலையத்தை மணிப்பூர் பகுதியை சேர்ந்த பெண் கைதி ஒருவர் நடத்தி வருகிறார். இவர் டெல்லி மற்றும் பெங்களூரு பகுதிகளிலுள்ள அழகு நிலையங்களில் பணிபுரிந்துள்ளார். இவர் கடந்த இரண்டு வருடமாக திகார் சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இந்த அழகு நிலையத்தில் பணியாற்றுவது தொடர்பாக அந்தப் பெண், “இந்த அழகு நிலையத்தில் பணியாற்ற தொடங்கியது முதல்  மகிழ்ச்சியாக உள்ளேன். இங்கு வேலை பார்ப்பதால் சிறையில் இருப்பது போன்ற உணர்வே வரவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.  

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close