[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் சந்திக்கவுள்ள மாமல்லபுரத்தில் சீன அதிகாரிகள் ஆய்வு
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு. பொறுப்பு தலைமை நீதிபதியாக வினீத் கோத்தாரி நியமனம்.
  • BREAKING-NEWS 7 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி

சிதம்பரத்திடம் சிபிஐ கேட்ட 20 கேள்விகள் என்ன ?

20-questions-posed-to-p-chidambaram-by-cbi

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து  ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையை முடித்து கொண்டு ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விசாரணையின் போது ப.சிதம்பரத்திடம் 20 முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது

1.உங்களிடம் உள்ள வெளிநாட்டு சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு?
2.பிரிட்டன், ஸ்பெயின், மலேசியா ஆகிய நாடுகளில் சொத்துக்கள் வாங்க பணம் கிடைத்தது எப்படி?
3.ஸ்பெயினின் பார்சிலோனா டென்னிஸ் கிளப் வாங்க பணம் கிடைத்தது எப்படி?
4.உங்களுக்கோ அல்லது கார்த்தி சிதம்பரத்துக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் இருந்து எந்த வகையில் பணம் கிடைத்தது?
5.ஐஎன்எக்ஸ் மீடியா பேரத்தில் கிடைத்த லஞ்ச பணத்தை நீங்கள் அல்லது கார்த்தி சிதம்பரம் எதில் முதலீடு செய்தீர்கள்?

6.வெளிநாடுகளில் உள்ள உங்களது போலி நிறுவனங்கள் குறித்து ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது குறித்து உங்கள் பதில் என்ன?
7.உங்களுக்கோ அல்லது கார்த்தி சிதம்பரத்துக்கோ எத்தனை போலி நிறுவனங்கள் உள்ளன?
8.எந்தெந்த துறைகளில் அல்லது எந்தெந்த தொழில்களில் உங்கள் போலி நிறுவனங்கள் செயல்படுகின்றன?
9.ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் மொரீஷியஸை சேர்ந்த 3 நிறுவனங்கள் ரூ.305 கோடியை முதலீடு செய்துள்ளன. இது குறித்து உங்கள் பதில் என்ன?
10.அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளில் உங்கள் மகன் கார்த்தி தலையிட்டாரா?


11.ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் வெளிநாட்டு விதிகளை மீற உங்கள் மகனை அனுமதித்தது எப்படி?
12.வடக்கு பிளாக்கில் இந்திராணி முகர்ஜியை சந்தித்தது ஏன்?
13.இந்திராணி முகர்ஜியின் கணவர் பீட்டர் முகர்ஜியையும் நீங்கள் சந்தித்தீர்களா?
14.கார்த்தி சிதம்பரத்திடம் தொடர்பில் இருக்குமாறு இந்திராணி முகர்ஜியை கேட்டுக் கொண்டீர்களா?
15.ஐஎன்எக்ஸ் மீடியா வெளிநாட்டு முதலீட்டைப் பெற உங்கள் சார்பில் அனுமதி அளித்த அதிகாரிகள் யார்?


16.நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்?
17.டெல்லி உயர் நீதிமன்றம் உங்களது ஜாமினை தள்ளுபடி செய்த பிறகு எங்கு இருந்தீர்கள்? யாரை சந்தித்தீர்கள்? சந்திப்பு எங்கு நடைபெற்றது?
18.உங்களது செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அந்த எண்ணுக்கு பதிலால வேறு எந்த எண்ணை பயன்படுத்தினீர்கள்?
19.உச்ச நீதிமன்றத்தில் இருந்து திரும்புகையில் பாதி வழியில் காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்து இறங்கி எங்கு சென்றீர்கள்?
20.சிபிஐ நோட்டீஸ் ஒட்டியபிறகும் ஆஜராகாதது ஏன்?

தங்களது எந்த கேள்விகளுக்கும் ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்த நிலையில் அதனை ப.சிதம்பரம் தரப்பு மறுத்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close