[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு : கேரளாவில் தொடரும் சோகம்

8-persons-died-in-kerala-wayanad-landslide

கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மேப்பாடி பகுதியில் உள்ள புதுமலையில் நேற்று முன்தினம் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இரண்டு தேயிலை தோட்ட குடியிருப்புகள், பள்ளிவாசல், கோவில் மற்றும் சாலைகளில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். 

இந்த நிலச்சரிவில் தொழிலாளர் குடியிருப்பை சேர்ந்த 12 வீடுகள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி எத்தனை பேர் மாயமாகி உள்ளார்கள் என்ற விபரம் இதுவரை தெரியவில்லை. இருப்பினும் பலர் சிக்கி இருக்கலாம் எனப்படுகின்றது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close