[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS சிபிஐ விசாரணைக் காவலை ரத்துச் செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு. திங்கட்கிழமை வரை சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு தடை
  • BREAKING-NEWS கோவையில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது என காவல் ஆணையர் பேட்டி. உஷார் நிலையில் காவல்துறை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.70 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.84 காசுகளாகவும் விலை நிர்ணயம்

கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

kerala-government-declares-holiday-for-all-schools-across-the-state

கேரளாவில் தொடரும் கனமழையை அடுத்து அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக இடைவெளியின்றி பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தேயிலைத் தோட்டங்கள் வழியே காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. வயநாட்டில் மேப்பாடி, புதுமலை பகுதிகளில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தொழிலாளர்களின் குடியிருப்புகள், கோயில், மசூதி ஆகியவை அடித்து செல்லப்பட்டன. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. 

தொடர் மழையால், மின் வினியோகம், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் தடைபட்டுள்ளன. கொச்சி விமான நிலையத் துக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்வு வாழ்க்கை அடியோடு முடங்கி யுள்ளது. பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு காரணமாக, இயல்பை விட 6 அடிக்கு மேல் தண்ணீர் பெருக் கெடுத்துள் ளது. ஆறுகளின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறு, பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். 


இதற்கிடையே, கனமழை காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறுவதாக பல்கலைக்கழகத் தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close