[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

மூளையில் ரத்தக்கசிவு: உயிரிழந்த டிக் டாக் பிரபலம்

aaruni-kurup-9-year-old-malayalam-tiktok-sensation-from-kerala-dies-of-brain-disease

மூளையில் ரத்தக்கசிவு காரணமாக டிக் டாக் பிரபலமான ஆருணி உயிரிழந்தார். சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

மலையாள டிக் டாக் உலகில் மிகவும் பிரபலமானவர் 9 வயதான ஆருணி கரூப். தன்னுடைய நடிப்புத்திறன் மூலம் டிக் டாக்கில் தனக்கென பெரிய ரசிகர்கள் வட்டத்தையே உருவாக்கி வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆருணி கடுமையான தலைவலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆருணிக்கு மூளையில் ரத்தக்கசிவு போன்ற நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. உடனே அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி ஆருணி உயிரிழந்தார்.

சவுதி அரேபியாவில் பணியில் இருந்த போது ஆருணியின் தந்தை கடந்த வருடம் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஆருணியின் இறப்பு மலையாள டிக் டாக் வாசிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய டிக் டாக் வீடியோவை பலரிம் பகிர்ந்து ஆருணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close