[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

கர்நாடக சபாநாயகருக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு 

karnataka-mlas-case-judgement-tomorrow

கர்நாடக சபாநாயகருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. 

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. தங்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க உத்தரடவிடக் கோரி 14 எம்எல்ஏக்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் அரசியல் சாசன விவகாரம் என்பதால், விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது எனவே தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தீர்ப்பு நாளை காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். கர்நாடகா சட்டப் பேரவையில் வரும் வியாழக்கிழமை முதலமைச்சர் குமாராசாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க சபாநயகர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close