[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

‘நேரத்தை மக்கள் எப்படி செலவழிக்கிறாங்க?’ சர்வே எடுக்கிறது அரசு

centre-measuring-how-we-spend-our-time

பொதுமக்கள் தங்களின் நேரத்தை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தி வருகிறது. முதன்முறையாக அரசு இத்தகைய ஆய்வை முன்னெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து புதிய சர்வே ஒன்றை நடத்தி வருகிறது. புள்ளி யியல் அதிகாரி பிரவீன் ஸ்ரீவத்சவா பல்கலைகழகம் ஒன்றில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டார். 

இதன்படி பொதுமக்கள் தங்களின் நேரத்தை எவ்வாறு செலவிடுகின்றனர் என்பது ஆய்வு செய்யப்படுகிறது. ஜனவரி மாதம் தொடங்கிய ஆய்வு நான்கு பிரிவுகளாக டிசம்பர் வரை ஓராண்டு காலத்திற்கு நடத்தப்படுகிறது. 

ஊதியம் கிடைக்கும் பணிகளில் செலவிடும் நேரமும் ஊதியம் கிடைக்காத பணிகளில் நேரமும் இதில் கணக்கிடப்படும். குறிப்பாக வீட்டு வேலை, குழந்தைகளிடம் செலவிடும் நேரம் ஆகியவை கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் வேலையை தவிர மற்ற நேரங்களில் மக்கள் எந்தெந்த பணிகளில் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர் என்பது குறித்த விவரம் தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close