[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

 “சாதி பாகுபாடு வேண்டாம்” - டிவி நிகழ்ச்சியில் கண்ணீர்விட்ட எம்எல்ஏ மகள்!

bjp-mla-s-daughter-fears-for-life-after-marrying-dalit

காதல் திருமணம் செய்துகொண்ட பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏவின் மகள், சாதிப் பாகுபாடு காட்ட வேண்டாம் என்று தொலைக்காட்சி வாயிலாக தனது தந்தைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா எம்எல்ஏ ராஜேஷ் குமார் மிஷ்ரா என்பவரின் மகள் சாக்ஷி, அஜிதேஷ் என்ற இளைஞரை காதலி்த்து மணமுடித்தார். சாக்ஷி உயர் வகுப்பையும், அஜிதேஷ் பட்டியலின வகுப்பையும் சேர்ந்தவர்கள் ஆவர். வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை கரம்பிடித்ததால் தமது தந்தை மற்றும் அவரது ஆட்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் சாக்ஷி அண்மையில் வெளியிட்ட ஒரு வீடியோ நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுபோன்ற சூழலில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையில், சாக்ஷி, கலந்து கொண்டார். அப்போது தனக்கு பல கனவுகள் இருந்ததாகவும், தான் நன்கு படிக்க விரும்பியதாகவும் அவர் கூறினார். தன்னை வேலைக்கு அனுப்புமாறு கூறியதை தனது தந்தை ஒருபோதும் தீவிரமான விஷயமாக எடுத்துக்கொண்டதில்லை என கண்ணீர் மல்க சாக்ஷி பேசினார்.

தனது தந்தை ஒருநாள் கூட தன்னை வீட்டை விட்டு வெளியே விட்டதில்லை என்று தனது மனக்குமுறலை அவர் வெளிப்படுத்தினார். தந்தை அவரது அலுவலகத்திற்குச் செல்லும் போதெல்லாம், வீட்டில் தாயும் தனது சகோதரனும் தன்னை மிகவும் துன்புறுத்தியதாகவும் சாக்ஷி தெரிவித்தார்.

தொலைக்காட்சி நிறுவன அரங்கில் இருந்தபடியே சாக்ஷி, தனது தந்தை ராஜேஷ் மிஷ்ராவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டுக்கதறிய சாக்ஷி, தனது செயலுக்காக தந்தையிடம் மன்னிப்புக் கோரினார். மேலும் தங்களது மனப்பான்மையை மாற்றிக்கொள்ளுமாறும், யாரிடமும் சாதிப் பாகுபாடு காட்ட வேண்டாம் என்றும் தனது தந்தையிடம் மன்றாடிக் கேட்டுக்கொண்டார். மறுமுனையில் பேசிய அவரது தந்தை ராஜேஷ் மிஷ்ரா, "உனக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும்" எனக்கூறிவிட்டு தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார். இந்நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பில் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதனிடையே ஒரு புதுமணத் தம்பதியாக அமைதியான வாழ்க்கையை வாழ்வதற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி சாக்ஷியும், அவரது கணவர் அஜிதேஷூம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர்கள் இருவரும் நீதிமன்றத்திற்கு வராததால், விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close