[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

கர்நாடக அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை: சித்தராமையா

there-is-no-threat-to-the-karnataka-government-siddaramaiah

கர்நாடக அரசுக்கு எந்த வித அச்சுறுத்தலும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. 225 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் இந்தக் கூட்டணிக்கு 120 பேர் ஆதரவு இருந்து வருகிறது. இதில் அமைச்சர் பதவி கிடைக்காத எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். அதோடு சமீபத்தில் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ், ஆனந்த்சிங் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களின் ராஜினா மாவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதள கட்சிகளை சேர்ந்த 12 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தனர். பின்னர் அந்த எம்.எல்.ஏ.க்களில் 11 பேர், ஆளுநரைச் சந்தித்து பேசினார்கள். பின்னர் மும்பை சென்ற அவர்கள் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் தங்களது பதவியை இன்னும் ஓரிரு நாட்களில் ராஜினாமா செய்யக் கூடும் என்று தெரிகிறது. 

இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை இன்று காலை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே இந்த அரசியல் பரபரப்பு பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்தராமையா, ‘’இந்த பரபரப்பின் பின்னணியில் பாஜக இருப்பது தெளிவாக தெரிகிறது. இது, அவர்களின் ஆபரேஷன் தாமரை. இருந்தாலும் எல்லாம் நன்றாகவே சென்று கொண்டிருக்கிறது. கவலைப்படத் தேவையில்லை. இந்த அரசு நீடிக்கும். கட்சிக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close