[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

“நேரு குடும்பத்தில் வராத ஒரு தலைவர் வேண்டும்” - ராகுலுக்கு கடிதம்

maharashtra-congress-leader-writes-to-rahul-gandhi-says-non-gandhi-member-must-be-party-chief

காந்தி பெயரை அடைமொழியாக கொண்ட நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக வரவேண்டும் என மகாராஷ்டிர காங்கிரஸ் நிர்வாகி கடிதம் எழுதியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை கூட அந்தக் கட்சியால் பெறமுடியவில்லை. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்ற தான் பதவி விலகுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். ஆனால் அந்த முடியவை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. அவரே தலைவராக தொடர வேண்டும் என தமிழகம் உட்பட பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இருப்பினும் ராகுல் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேரு குடும்பத்தில் இல்லாத ஒருவர் காங்கிஸின் தலைவராக வரவேண்டும் என மகாராஷ்டிரா இளைஞரணி செய்தித்தொடர்பாளர் ஆனந்த் துபே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவை தான் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மற்ற கட்சியினர் வெற்றி முடியவில்லை என்றால் உடனே தலைவர் பதிவியில் இருந்து விலகுவதாக கூறியுள்ள அவர், அதே வழியை காங்கிரஸும் பின்பற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்திருந்தார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close