[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS மருத்துவமனையில் அருண் ஜெட்லி.. நள்ளிரவில் அமைச்சர்கள் சந்திப்பு
  • BREAKING-NEWS அத்திவரதர் வைபவம் நிறைவு: அனந்தசரஸ் குளத்தில் இன்று வைக்கப்படுகிறது சிலை!
  • BREAKING-NEWS சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை- செங்கோட்டையன்

ரூ.14,500 கோடி வங்கி மோசடி - நிரவ் மோடியை தாண்டிய தொழிலதிபர்‌கள்

enforcement-department-said-sandesara-group-has-defrauded-of-rs-14-500-crore

குஜராத்தை சேர்ந்த சந்தேசரா குழுமம் சுமா‌ர் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அ‌ளவுக்கு வ‌ங்கிக் கடன் மோசடி செய்துள்ளதாகவும், இது நிரவ் மோடி செய்த மோசடியை விட பெரிதாக தெரிவதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த சந்தேசரா குழும நிறுவனம் நைஜீரியா நாட்டில் எண்ணெய் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் வங்கிக் கடன் மோசடி செய்ததாகக்கூறி அந்நிறுவனத்தின் ஆயிரத்து 778 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை சில நாட்களுக்கு முன் முடக்கியது. நைஜீரிய கடல் பகுதியில் உள்ள எண்ணெய் எடுக்கும் தளவாடங்கள், கப்பல்கள், சொகுசு விமானங்கள், ஆடம்பர மாளிகைகள் முடக்கப்பட்ட சொத்துகளில் அடங்கும். வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளின் கிளைகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த புகாரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Image result for sandesara group of companies

இந்நிலையில் இது தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், சந்தேசரா குழுமத்தின் உரிமையாளர்கள் தொழில் விரிவாக்கத்திற்கு எனப் பெற்ற கடன்களை தங்கள் சொந்த தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. வங்கி மோசடிக்கு வசதியாக 96 நாடுகளில் 247 பெயர்களில் நிறுவனங்களை நடத்துவதாக தகவல் தெரிவித்ததும், ஆனால் அந்நிறுவனங்கள் போலியானவை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. வைர தொழிலதிபர் நிரவ் மோடி 11 ஆயிரத்து 400 கோடி அளவில் வங்கி மோசடி செய்துள்ளதாகவும் சந்தேசரா குழுமத்தினர் அதை விட அதிகமாக அதாவது 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் ஏய்ப்பு செய்துள்ளது தெரிய வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Related image

மேலும் குஜராத்தைச் சேர்ந்த நிதின் சந்தேசரா, சேதன் சந்தேசரா, தீப்தி சந்தேசரா ஆகியோர் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற பெயரில் மருந்து உற்பத்தி தொழிலிலும் ஸ்டெர்லிங் எனர்ஜி என்ற பெயரில் எண்ணெய் துரப்பண தொழிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close