[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

பயணிகளை தாக்கியதாக புகார் ! கல்லடா டிராவல்ஸ்க்கு ஓராண்டு அனுமதி ரத்து

assault-on-passengers-permit-of-kallada-travels-bus-cancelled

பயணிகளை தாக்கிய புகாரில் கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் கல்லடா டிராவல்ஸின் அனுமதி ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கல்லடா டிராவல்ஸில் மாணவர்கள் சிலர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து இடையில் நின்றுள்ளது. இதனையடுத்து மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு ஊழியர்களிடம் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இருதரப்பில் பேச்சுவார்த்தையை நடத்தி பிரச்னையை முடித்து வைத்துள்ளனர். அத்துடன் பயணிகள் மாற்று வண்டியில் பயணிக்க ஏற்பாடு செய்யுமாறும் ஏஜென்ஸியிடம் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி மாற்று பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அட இதையும் படிக்கலாமே... அதிமுகவை அழித்து அமமுகவால் வளர முடியாது! - தங்க தமிழ்செல்வன்   

இதனிடையே பேருந்து கேரளாவில் விட்டிலா பகுதியை அடைந்தபோது, டிராவல்ஸ் ஏஜென்ஸி ஊழியர்கள் மாணவர்களை தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகின. இதனையடுத்து இதுகுறித்த விசாரணைக்கு போலீசார் உத்தரவிட்டனர். அத்துடன் கல்லடா டிராவல்ஸ் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பலரும் தங்களது எதிர்ப்பு குரல்களை பதிவு செய்தனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் கல்லடா டிராவல்ஸின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அனுமதி ரத்து ஒருவருடத்திற்கு பொருந்தும். திருச்சூர் மாநில போக்குவரத்து ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதுவரை கல்லடா டிராவல்ஸ் மீது 17 புகார்கள் வந்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close