[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

ஆப்கன் குண்டுவெடிப்பில் இந்தியர்கள் 2 பேர் பலி: வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

two-indian-dies-in-afgan-blast

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ‌

ஆப்கானிஸ்தா‌ன் தலைநகர் காபூலில், பாதுகாவலர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தி உள்ளனர்‌. இதில் இந்தியாவைச் சேர்ந்த இருவர், நேபாளத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 25 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் டேராடூனைச் சேர்ந்த கணேஷ் தபா, கோவிந்த் சிங் ஆகிய இருவரும் இந்தத் தாக்குத‌லில் உயிரிழந்திருப்பது தெரிய வந்திருப்பதாக ‌மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த இருவரது குடும்பத்தினரிடமும் மத்திய அரசு சார்பில் தொடர்பு கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close