[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்
  • BREAKING-NEWS “கன்னடம்தான் முக்கியத்துவம் வாய்ந்த மொழி” - எடியூரப்பா
  • BREAKING-NEWS இந்தியக் கடற்படையின் கப்பல்தளத்தில் அப்ரண்டிஸ் பணி
  • BREAKING-NEWS “ஒரு மொழியை திணித்தால் ஏற்க மாட்டோம்”- கமல்ஹாசன்

சேஷாசலம் என்கவுன்டர் சம்பவம் தொடர்பான வழக்கு ஜூலை 11-க்கு ஒத்திவைப்பு

sheshachalam-encounter-case-adjopurned-to-july-11

சேஷாசலம் வனப்பகுதியில் நடத்தப்பட்ட என்கவுன்டர் சம்பவம் தொடர்பான வழக்கை முடிக்‌கக்கோரும் மனு மீதான விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் 20 தமிழக கூலி தொழிலாளர்களை என்கவுன்டர் செய்து சுட்டு கொன்றது ஆந்திர வனத்துறை. இதுதொடர்பான வழக்கு திருப்பதி 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு இ‌துதொடர்பான அறிக்கையைத் சென்ற மாதம் தாக்கல் செய்தது. ‌அதில், திட்டமிட்டு என்கவுன்டர் செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை‌ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் என்கவுன்டரில் இறந்த சசிக்குமாரின் மனைவி அந்த அறிக்கையின் நகலைக் கோரியதுடன் வழக்கை ஒத்திவைக்கும் படியும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close