[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

ஷேர் ஆட்டோ ஓட்டுநரை புரட்டி எடுத்த போலீசார் - வைரல் வீடியோ 

tempo-driver-attacks-policeman-with-sword-cops-respond-with-brutal-beating

டெல்லியில் பரபரப்பான சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டுநருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இரண்டு பேரை கடுமையாக தாக்கிய 3 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்‌ளனர்.

டெல்லியில் உள்ள முகர்ஜி நகர் சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்த சீக்கியர் ஒருவர், காவல்துறை வாகனத்தின் மீது மோதியதாகத் தெரிகிறது. இதையடுத்து அருகில் இருந்த காவல் நிலையத்தில் இருந்து காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அந்த ஓட்டுநரிடம் விசாரித்தபோது , அவர் கத்தியை காட்டி காவலர்களை மிரட்டியுள்ளார். பதிலுக்கு போலீஸ் ஒருவர் தூப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளார். அப்போது காவலர் ஒருவரை அவர் தாக்கியதால் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து ஏராளமான காவலர்கள் அந்த ஓட்டுநரைச் சுற்றி வளைத்து கடுமையா‌க தாக்கினர். அப்போது அந்த ஓட்டுநரின் மகன் வாகனத்தை கொண்டு வந்து காவலர்கள் மீது மோதினார். இதையடுத்து காவலர்கள் அவரையும் பிடித்து லத்தியால் தாக்கினர். ஆட்டோ ஓட்டுநரை சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற காவலர்கள் காலால் உதைத்தும் தாக்கினர். 

இந்தக் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அங்கிருந்த பலரும் இந்தச் சண்டைக் காட்சிகளை செல்போனில் படம்பிடித்து வெளியிட்டனர். பட்டப்பகலில்‌ ஏராளமானோர் வந்து செல்லும் சாலையில் காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர் இடையேயான சண்டை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறையி‌னரின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு   தெரிவித்துள்ள சீக்கியர்கள் அமைப்பு சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளது. 

இந்தச் சூழலில் 3 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை‌ தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை விளக்கமளித்துள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close