[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி

pm-modi-take-oath-as-varanasi-mp

வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த 17-ஆவது மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாஜக சார்பில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். இந்த சூழலில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது பாஜக ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது.

அப்போது வாரணாசி தொகுதி எம்.பி.யாக பிரதமர் மோடி பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து புதிய உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர். முன்னதாக மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திரகுமாரும் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close