[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

பெங்களூரு நகைக்கடை மோசடியில் 23 ஆயிரம் பேர் புகார்: துபாய் தப்பினார் உரிமையாளர்!

khan-fled-to-dubai-say-cops-plaints-cross-23k-in-ima-scam

பெங்களூரு நகைக்கடை மோசடியில், புகார் கொடுத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியது. கடை உரிமையாளர் துபாய்க்கு தப்பி ஓடினார்.

பெங்களூரு சிவாஜிநகரில் நகைக்கடை நடத்தி வருபவர் முகமது மன்சூர் கான். தனது கடையில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக அவர் கூறியதை நம்பி ஆயிரக்கணக்கானோர் அவர் நகைக்கடையில் முதலீடு செய்தனர். இந்நிலையில், கடந்த 8 ஆம் தேதி மன்சூர் திடீரென்று மாயமானார். அதைத்தொடர்ந்து, சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரோஷன் பெய்க், தன்னிடம் வாங்கிய ரூ.400 கோடியை திரும்ப தர மறுத்து, கொலை மிரட்டல் விடுக்கிறார். இதனால் தற்கொலை செய்ய உள்ளதாக மன்சூர் கான் பேசும் ஆடியோ வெளியானது.

இந்நிலையில், மன்சூர்கானிடம் முதலீடு செய்தவர்கள் கடந்த 10-ஆம் தேதி அவர் நகைக்கடை முன்பு போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களிடம் புகார்கள் பெற தொடங்கினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதில் 1,230 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக நகைக்கடையின் இயக்குனர்கள் 7 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மன்சூர் கானை தேடி வந்தனர். அவர் துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் இருந்து தினமும் ஏராளமான புகார் வருகின்றன. புகார்களை கொடுக்க பொதுமக்கள் வரிசையில் நேற்று காத்திருந்தனர். இதுவரை மன்சூர் கான் மீது கொடுக்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கிடையே, இந்த நகைக்கடையில் ரூ.8 லட்சம் மூதலீடு செய்த பழைய குட்டலஹள்ளி பகுதியை சேர்ந்த அப்துல் பாஷா என்பவர் அதிர்ச்சியில் இறந்துள்ளார். அவர் மகளின் திருமணம் அடுத்த மாதம் நடக்க இருக்கிறது. அதற்காக அந்தப் பணத்தை முதலீடு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close