[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஒருநாளைக்கு 2000டன் குப்பை: டெல்லியை அச்சுறுத்தும் குப்பை மலை!

garbage-mountain-at-delhi-s-ghazipur-landfill-to-rise-higher-than-taj-mahal-by-2020

இன்னும் ஒரே வருடத்தில் தாஜ்மஹாலை விடவும் டெல்லியில் உள்ள ஒரு குப்பைக்கிடங்கு உயரமாகிவிடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கிழக்கு டெல்லியில் உள்ள காஸிபூர் பகுதியில் உள்ள ஒரு குப்பைக்கிடங்கு இந்தியாவிலேயே உயரமான குப்பைக்கிடங்கு என்று பெயர் எடுத்துள்ளது. மலை போல காட்சி அளிக்கும் இந்த குப்பைக் கிடங்கால் அப்பகுதிவாசிகளுக்கு சுவாசப்பிரச்னை உள்ளிட்ட உடல்நிலை கோளாறுகள் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது 65மீட்டர் உயரம் கொண்ட குப்பைக்கிடங்கு அடுத்த வருடத்தில் தாஜ்மஹாலின் உயரமான 73 மீட்டரை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.

1984ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த காஸிபூர் குப்பைக்கிடங்கு அதன் முழுக்கொள்ளளவை 2002ம் ஆண்டு எட்டுவிட்டது. ஆனாலும் குப்பைக்கிடங்கு மூடப்படாமல் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. ஒருநாளைக்கு 2000 டன் குப்பைகள் அங்கு கொட்டப்படுவதாகவும் இது இப்படியே தொடர்ந்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திடக்கழிவு மேலாண்மையில் இந்தியா பின் தங்கி இருப்பதையே இது உணர்த்துவதாகவும், டெல்லி மற்றும் மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close