[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும்; சோலைவனம் பாலைவனம் ஆகாது - தமிழிசை
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்

பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் மோடி

prime-minister-narendra-modi-met-former-president-pranab-mukherjee-today

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்கிறார். பதவியேற்பு விழா 30 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு ராஷ்ட்ரபதி பவனில் நடக்கிறது. இதில் நம் நாட்டு அரசியல் கட்சி தலைவர்களுடன் சில வெளிநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் பதவியேற்பு விழாவுக்கு முன், மூத்த அரசியல் தலைவர்களை சந்தித்து வருகிறார் மோடி. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்த மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை இன்று சந்தித்து ஆசி பெற்றார். அப்போது பதவியேற்பு விழாவுக்கு அவர் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

பின்னர் இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி ட்விட்டரில், ’’பிரணாப் முகர்ஜியை சந்திப்பது எப்போதும் செறிவூட்டும் அனுபவம். அவரது அறிவும் அனுபவமும் இணையற்றவை. திறமையான, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர். இன்றைய சந்திப்பில் அவரிடம் ஆசி வாங்கினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close