[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்தார் பி.வி.சிந்து.
  • BREAKING-NEWS வேதாரண்யத்தில் இரண்டு தரப்பினரிடையே மோதல்: காவல்நிலையம் மீது கல்வீச்சு
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் கங்கையம்மன் கோயில் குளத்தில் கிடந்த மர்மப் பொருள் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு.
  • BREAKING-NEWS தமிழகத்தில் எந்த விதத்திலும் தீவிரவாதம் தலைதூக்க முடியாது: ஜெயக்குமார்
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்

“அருண் ஜெட்லி நலமாக இருக்கிறார்”- மத்திய அரசு தகவல்

arun-jaitley-fine-now-don-t-spread-rumours

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சர் அருண் ஜெட்லிக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதால், மத்தியில் அமைய உள்ள புதிய அமைச்சரவையில் அவர் அங்கம் வகிப்பது சந்தேகம் என்றும், இங்கிலாந்து அல்லது அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அருண் ஜெட்லி செல்வார் எனவும் செய்தி பரவியது.

கடந்த வாரம் எம்ய்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்‌பட்ட அருண் ஜெட்லி, வியாழக்கிழமை அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனால் பாஜகவின் வெற்றிக் கொண்டாட்டத்தில் அவரால் பங்குபெற முடியவில்லை. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது.

இந்நிலையில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நலமாக உள்ளார் என்றும், அவரது உடல்நிலை குறித்து வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என மத்திய அரசின் செய்தித் தொடர்பாளர் சிதான்ஷூ கர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்கள் வதந்திகளை பரப்பாமல், தெளிவாக செய்திகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close