[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

திமுக கூட்டணிக்கு 38 இடங்கள்? - கருத்துக்கணிப்பு முடிவுகள்

exit-poll-results-of-tamilnadu

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் இன்று மாலை 6 மணியோடு நிறைவடைந்தது. இந்நிலையில் தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதன்படி இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக கூட்டணி 34 முதல் 38 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது. அத்துடன் அதிமுக கூட்டணி 0 விலிருந்து 4 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவைக்கு எந்த இடத்திலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close