[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

சோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு!

chandrababu-naidu-to-meet-sonia-gandhi-today-evening

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவைத் தேர்‌‌தலுக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. வரும் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகி றது. இந்நிலையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக, பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட சிலரை சந்தித்துப் பேசிய அவர், பாரதிய ஜனதாவுக்கு எதிரான மனநிலையில் உள்ள, தெலங்‌கானா ராஷ்டீரிய சமிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரையும், மெகா கூட்டணிக்கு வரவேற்பதாகத் தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பாஜக ஆட்சி அமைவதை தடுக்க என்னென்ன முயற்சிகள் எடுப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், ராகுல் காந்தியை இன்று மீண்டும் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார்.  பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரைச் சந்தித்து பேசினார். இன்று மாலை அவர் சோனியா காந்தியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close