[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

வீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு 168 முறை அடி: ஆசிரியர் கைது

madhya-pradesh-teacher-asks-students-to-slap-girl-168-times-for-not-completing-homework

மத்திய பிரதேச மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாத மாணவியின் கன்னத்தில் 168 முறை அடிக்க வைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேச மாநிலம், ஜபுவா மாவட்டத்தில் உள்ள தண்ட்லா டவுணில் ஜவஹர் நவோதயா பள்ளி உள்ளது. இங்கு மாணவி ஒருவர், ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதி, அந்த மாணவி ஹோம் ஒர்க் செய்யவில்லை. இதற்கு தண்டனையாக பள்ளி ஆசிரியர் மனோஜ் வர்மா, அவள் கன்னத்தில் அறையும்படி சக மாணவியரிடம் சொன்னார். அதாவது, ஆறு நாட்கள் தினமும் இரண்டு முறை அந்த மாணவியின் கன்னத்தில் 14 மாணவிகள் அறைந்துள்ளனர். இதன்படி அந்த மாணவிக்கு 168 முறை கன்னத்தில் அறை விழுந்துள்ளது.  இதுபற்றி தன் தந்தையிடம் அழுதபடி சொன்னார் மாணவி. மாணவியின் தந்தை, சிவ்பிரதாப் சிங், பள்ளி நிர்வாகத்திடமும் போலீசிலும் புகார் அளித்தார். பள்ளி நிர்வாகம் ஆசிரியரை சஸ்பெண்ட் செய்தது. 

விசாரித்த போலீசார் ஆசிரியர் மனோஜ் வர்மா மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு தண்ட்லா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த நீதிமன்றம், ஆசிரியர் மனோஜ் வர்மாவின் ஜாமின் மனுவை ரத்து செய்து, உடனடி யாக கைது செய்ய உத்தரவிட்டது. 

மாணவியின் தந்தை சிங் கூறும்போது, ‘’அந்த சம்பவத்துக்குப் பிறகு என் மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதற்கு பிறகு அவள் பள்ளிக்குச் செல்வதையே நிறுத்திவிட்டாள்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close