[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் வீட்டை சூறையாடிய மக்கள்

telangana-twin-murders-angered-villagers-vandalise-suspect-srinivas-reddy-s-house

இரட்டையர்களான சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த கொடூரனின் வீட்டை மக்கள் சூறையாடி தீவைத்து எரித்த சம்பவம் தெங்கானாவில் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ஹஜிபூர் கிராமத்தில் உள்ள மர்ரி ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவரது வீட்டின் கிணற்றில் இருந்து 14 வயது சிறுமியின் சடலம் ஒன்று எடுக்கப்பட்டது. அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த குற்றத்திற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீநிவாஸ் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. பின்னர் நேற்று காவல்துறையினர் அதே வீட்டில் உள்ள, அதே கிணற்றில் ஆழமாக தோண்டி மற்றொரு சிறுமியின் சடலத்தை மீட்டெடுத்தனர். 

அந்தச் சிறுமியின் சடலமும், ஏற்கனவே தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் சடலமும் ஒரே உருவத்தை கொண்டிருந்ததால், அவர்கள் இரட்டையர்கள் என்பது தெரியவந்தது. இந்தச் சிறுமியும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்ரீநிவாஸ் ரெட்டி குடும்பத்தினர் தாங்கள் வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியேறினர். இதனால் வீடு ஆளின்றி காணப்பட்டது. 

இந்நிலையில் ஸ்ரீநிவாஸ் மீது ஆத்திரத்தில் இருந்த ஊர்மக்கள், அவரது வீட்டை அடித்து நொறுக்கினர். அங்கிருந்த மரப்பொருட்களை தீவைத்து எரித்தனர். இருந்த பொருட்கள் அனைத்து உடைத்து வீட்டையே சூறையாடினர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் மக்களை அங்கிருந்து அனுப்பினர். வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனப் புவனகிரி டிசிபி நாராயண் ரெட்டி தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீநிவாஸ் ரெட்டி இது போன்று மொத்தம் 5 கொலைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Courtesy : The News Minute

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close