[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

துலாபாரத்தின் போது தராசு அறுந்து விழுந்து சசி தரூர் படுகாயம்!

shashi-tharoor-injured-as-weighing-balance-breaks-during-thulabharam-ritual

துலாபாரத்தின் போது தராசு உடைந்ததில் திருவனந்தபுரம் காங்கிரஸ் வேட்பாளர் சசி தரூர் படுகாயம் அடைந்தார்.

திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார் சசி தரூர். இவர், அங்கு தம்பானூரில் உள்ல கந்தாரி அம்மன் கோயிலில் இன்று எடைக்கு எடை வாழைப்பழம் கொடுப்பதற்காக வந்தார். அப்போது துலாபாரத் தராசின் ஒரு பக்கத்தில் வாழைப்பழங்களும் மறுபக்கம் அவரும் உட்கார்ந்தனர். அப்போது அவர் அமர்ந்திருந்த தராசு அறுந்து விழுந்தது. இதில் சசிதரூரின் தலையின் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது காலிலும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல் போடப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close