[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.

குடியரசுத் தலைவருக்கு கடிதம்: முன்னாள் ராணுவத் தளபதிகள் மறுப்பு!

rashtrapati-bhavan-denies-receiving-any-letter-supposedly-written-by-armed-forces-veterans

குடியரசுத் தலைவருக்கு கடிதம் எதுவும் எழுதவில்லை என்று இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி என்.சி.சூரியும் முன்னாள் தளபதி ரோட்ரிக்ஸும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். 

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல் கட்டத்தேர்தல் நேற்று நடந்தது. தேர்தலுக்காக, தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பிரசாரத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் ராணுவம் குறித்து பேச தேர்தல் ஆணையம் தடை விதித் துள்ளது. புல்வாமா தாக்குதல் குறித்து பாஜக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் போஸ்டர்களை ஒட்டி வந்ததாலும் இந்திய ராணுவத்தை மோடி யின் சேனை என்று கூறியதாலும் இந்த தடை விதிக்கப்பட்டது. தடையை மீறியும் பாஜக தேர்தல் பிரசாரத்தில் ராணுவத்தை குறிப்பிட்டு வரு வது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இந்நிலையில் முன்னாள் ராணுவ தளபதிகள், ரோட்ரிக்ஸ், சுனித் பிரான்சிஸ், ஷங்கர் ராய் சவுதாரி, தீபக் கபூர், கடற்படை முன்னாள் தளபதிகள் லட்சுமி நாராயணன் ராமதாஸ், விஷ்ணு பகவத், சுரேஷ் மேத்தா, விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி ஆகியோர் உட்பட 150 முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் கடிதம் ஒன்று வெளியானது.

(ரோட்ரிக்ஸ்)

அதில், ’’எல்லைப் பகுதியில் நடக்கும் ராணுவ நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் ஆதாயம் கோருவதை ஏற்க முடியாது, இது வழக்கத்து க்கு மாறானது. இது, முன்னாள் படை வீரர்கள் மத்தியில் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம். ராணுவச் சீருடைகள், சின்னங்கள், செயல்பாடுகளை அரசியல் நோக்கங்களுக்காக, கட்சிகள் பயன்படுத்துவதை உடன டியாக தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் ராணுவ தளபதி ரோட்ரிக்ஸ், தான் அதில் கையெழுத்திடவில்லை எனவும் அந்தக் கடிதம் பற்றி தனக்கு எதுவும் தெரி யாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார். 

முன்னாள் விமானப்படை தளபதி ஏர்மார்ஷல் என்.சி.சூரி கூறும்போது, ’’இது அட்மிரல் ராமதாஸ் அனுப்பிய கடிதம் அல்ல. மேஜர் சவுதாரி இதை அனுப்பியுள்ளார். இதில் நான் கையெழுத்திடவில்லை. எங்கள் பெயர் தவறாக இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் எழுதப்பட்டவற்றை நான் ஏற்றுக்கொள்ளவில்லை’’ என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கிடையே குடியரசு தலைவர் மாளிகையும் தங்களுக்கு கடிதம் ஏதும் வரவில்லை என தெரிவித்துள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close