[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

''மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரிகளை குறைப்போம்'' - அருண் ஜெட்லி

if-bjp-will-come-again-to-central-power-taxes-will-reduce-definitely-arun-jaitley

பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரி விகிதங்கள் குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பாஜக ஆட்சி தொடர்பாக பேசிய அருண் ஜெட்லி, கடந்த 5 ஆண்டுகளில் வரி விகிதங்களை தங்கள் அரசு அதிகரிக்கவில்லை என்றும் ஆனால் வரி செலுத்துவோர் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது மூலம் வரி வருவாயை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி நடைமுறையில் 28% பிரிவில் இருந்த பல பொருட்கள் 12% அல்லது 18% பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக ஜெட்லி தெரிவித்தார். 

அடுத்து சிமென்ட்டின் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க போவதாகவும் ஜெட்லி கூறினார். தற்போது நாட்டின் நிதி நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் ஆட்சிக்கு வந்தால், இதே நிலையை தொடர நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் ஜெட்லி கூறினார். சர்வதேச பொருளாதார சூழல் சாதகமற்ற வகையில் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து 7 முதல் 7.5% என்ற அளவில் நீடிப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close