[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் - இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை - அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு
  • BREAKING-NEWS வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்றது - கிழக்கு இந்திய பெருங்கடல்- தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு எதிராக காவல்துறை அதிகாரிகள் 66 பேர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.34 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 8 காசுகள் அதிகரித்து விற்பனை
  • BREAKING-NEWS சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை- பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளும் தீவிர சோதனை

''மனைவிகளிடம் இருந்து கணவர்களை காப்பதே நோக்கம்'' - சுயேச்சை வேட்பாளரின் வேற லெவல் வாக்குறுதி!

head-of-ngo-for-harassed-husbands-enters-ls-poll-fray-in-gujarat

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வாக்குறுதிகளை அதிகம் நம்புகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிக்க என தனி குழு நிர்ணயித்தல், மக்களிடம் யோசனைகள் கேட்பது என பல நடவடிக்கைகளில் இறங்கி தேர்தலை சந்திக்கின்றன. ஏழ்மையை போக்குவோம். அடிப்படை வசதிகள் செய்து தருவோம் என்பது போன்ற வாக்குறுதிகளை வேட்பாளர்கள் அறிவித்து மக்களின் வாக்குகளை அள்ள போராடி வருகின்றனர். ஆனால் ஒரே வாக்குறுதியுடன் குஜராத்தை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 'மனைவியை எதிர்ப்போர் சங்கம்' என்ற சங்கத்தை ஆரம்பித்து நடத்தி வருபவர் தசரத் தேவ்தா. இவரது சங்கத்தில் 69 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உறுப்பினராக உள்ளனர். இந்நிலையில் தற்போது மக்களவை தேர்தலில் சங்கதலைவர் தேவ்தா இறங்கியுள்ளார். அகமதாபாத் கிழக்கு தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்குகிறார் தேவ்தா. 

மனைவியாலும் அவரின் உறவினர்களாலும் பாதிக்கப்பட்ட கணவர்களின் நலனை பாதுகாப்பதே தனது நோக்கம் என்று தேவ்தா கூறியுள்ளார். மேலும் கணவர்களை துன்புறுத்தும் மனைவிகளுக்கு சட்டப்பிரிவு 498 உதவுவதாகவும் , தான் எம்பி ஆனால் இதை திருத்த குரல் கொடுக்கப் போவதாகவும் தேவ்தா கூறியுள்ளார். அதற்காக நான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

தேர்தலில் தேவ்தா போட்டியிடுவது இது முதல்முறை அல்ல. 2014 மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கூட போட்டியிட்டுள்ளார். இதே வாக்குறுதியை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட இவர் 2 ஆயிரத்து 300 வாக்குகளை பெற்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close