[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

புல்வாமாவில்  துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

4-terrorists-of-lashkar-e-taiba-killed-in-an-encounter

புல்வாமாவில் நடைபெற்ற  துப்பாக்கிச்சண்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லசிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில்  லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் யார் என்பது குறித்து அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. பயங்கரவாதிகளிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அப்பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என நம்பப்படுவதால், தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close